மீஞ்சூர், செப். 05 –
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் 55 ஊராட்சிகளில் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வன்னிப் பாக்கம், அனுப்பம்பட்டு, திருப்பாலைவனம், மெதூர், பழவேற்காடு, திருவெள்ளைவாயல் உள்ளிட்ட ஊராட்சிகளில் நடைப்பெற்று வரும் பணிகளை கள ஆய்வு செய்வதற்காக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் திடீர் வருகை மேற்கொண்டார்.
ஆய்வின் துவக்கமாக வன்னிப்பாக்கம் ஊராட்சி மேட்டுப்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பள்ளிக்கூட கட்டிடத்தினை ஆய்வு செய்தார். தரமான செங்கல்கள் உபயோகப்படுத்தும் தண்ணீர் உள்ளிட்டவைகளை சோதனை செய்தார். அதே போன்று அனுப்பம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மலைவாழ் மக்களுக்கு கட்டப்பட்டு வரும் 20 வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களுக்கு பட்டாவினையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து பழவேற்காடு ஊராட்சியில் அடங்கிய அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அங்கு பொதுமக்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ வசதிகளை குறித்தும் கேட்டறிந்தார்.
நல்ல முறையில் இயங்கும் மருத்துவமனைக்கு தேவையான கூடுதல் வசதியினை செய்து தர ஆவணம் செய்தார். அங்கிருந்து திருப்பாலைவனம் பகுதிக்கு விரைந்தவர் நம்ம ஊரு சூப்பர் என்ற நிகழ்ச்சியில் பொன்னேரி ஸ்ரீதேவி கலைக்கல்லூரி மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு குளத்தில் உள்ள குப்பைகளை அகற்றினார். அருகிலுள்ள பள்ளிக்கூடத்தை ஆய்வு செய்து வர்ணம் பூசினார்.
அதனைத் தொடர்ந்து, திருவெள்ளைவாயில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கணக்கு வழக்குகளை பார்த்தார். அருகில் உள்ள மரக்கன்றுகளை வளர்க்கும் பூங்காவிற்கு சென்று மரக்கன்றுகளை பார்வையிட்டார். ஊராட்சியில் நடுவதற்காக குவிக்கப்பட்ட பண விதையினை பார்வையிட்டார். மேலும் திட்ட பணிகள் முடிக்கப்பட்டு முழுமை அடைந்த ஊராட்சிகளுக்கு அதிகாரிகளை அழைத்து இன்னும் குறுகிய நாட்களில் மீதமுள்ள பணிகள் முடிக்கப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணன் .துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, ஒன்றிய கவுன்சிலர் பானுபிரசாத், கதிரவன். ஊராட்சி மன்ற தலைவர்கள் வன்னிப் பாக்கம் மஞ்சுளா பஞ்சாட்சரம், அனுப்பம்பட்டு உமா மகேஸ்வரன் ,திருப்பாலைவனம் பவானி கங்கையமரன், பழவேற்காடு மாலதி சரவணன்.திருவெள்ளைவாயல் முத்து. உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.