கும்மிடிப்பூண்டி, ஏப். 24 –

கும்மிடிப்பூண்டியில் இன்று தமாகா  வடக்கு மாவட்ட  தலைவர் எஸ்.சேகரின் தாயார் படத்திறப்பு நிகழ்வில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்று படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியஓபுளாபுரம் ஊராட்சியில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட தமாகா தலைவர் எஸ்.சேகரின் தாயார் மறைந்த ஆர்.எஸ்.சரோஜம்மாளின் திருவுருவ படத்தை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் சிவகுமார், அதிமுக நிர்வாகிகள் ஓ.எம்.கிருஷ்ணன், முல்லை வேந்தன், ஏழுமலை, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி துணை தலைவர் எம்.கேசவன், கவுன்சிலர் அப்துல்கரீம், முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர், தமாக மாவட்ட தலைவர் எஸ்.சேகர்,மாநில செயற்குழு உறுப்பினர் டி.கே.மாரிமுத்து மாவட்ட இளைஞரணி தலைவர் செந்தில்குமார், என் ஆர் கே தாஸ், அசோகன், காமராஜ், ஹரி, நரேந்திரன், ஈசாக், ஜெகதீஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here