கும்பகோணம், நவ. 27 –
கும்பகோணத்தில் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் மகளிர் லியோ சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இண்டெக்ரேட்டட் எண்டர்பிரைசஸ் இந்தியா லிமிடெட் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் ஸ்ரீ சரஸ்வதி பாடசாலை பள்ளியில் நடைபெற்றது.
இம்முகாமை வைத்தியநாதன் மற்றும் லயன்ஸ் சங்க தலைவர் மோகன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த முகாமையில் செயலாளர் ராகவன் பொருளாளர் வாசுதேவன் நிர்வாக அலுவலர் ராமதுரை மூத்த உறுப்பினர் காசி பாலசுப்ரமணியன் பரதன் மண்டல தலைவர் சதிஷ் மற்றும் லயன்ஸ் சங்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த முகாமில் பங்கேற்ற பயனாளிகளுக்கு, ரத்த வகை, சக்கரைநோய், ரத்த அழுத்தம் உள்ளிட்டவைகளுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது..
இம்முகாமில் பார்வை குறைபாடு, கண்புரை, கண்ணில் நீர் வடிதல், கண் அழுத்தம் போன்ற நோய்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
350 க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டன. அவர்களை அறுவை சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.






















