திமுக எம்.பி, எம்.எல்.ஏ பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம் 

செய்தி சேகரிப்பு இ.சி.ஆர். பா.வினோத் கண்ணன்

சென்னை, ஆக. 29 –

 

சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம் ரேடியல் சாலை, மேடவாக்கம் சாலை, ஈ.சி.ஆர். செல்லும் கலைஞர் கருணாநிதி சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடியில் நாளையிலிருந்து கட்டணம் வசூலிக்கப்படாது என்ற அறிவிப்பை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நெடுஞ்சாலை துறை மானியக் கோரிக்கையின் போது தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார்.

திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள சுங்கச்சாவடியை அகற்றுவோம் என கூறியிருந்தனர். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் இருந்த நான்கு சுங்கச்சாவடிகளில் இனி மேல் கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவித்ததை தொடர்ந்து இன்று திமுக எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துக் கொண்ட நிகழ்ச்சியில் திமுகவினர் பட்டாசு வெடித்து பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். 

சென்னை பெருங்குடி சுங்கச் சாவடியில் திமுக தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன்,  சோழிங்க நல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த்ரமேஷ் ஆகியோர் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி சுங்கச்சாவடியில் கட்டணம் ரத்து செய்ததை கொண்டாடினர்.

சோழிங்கநல்லூர் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். அரவிந்த்ரமேஷ் நன்றியை தெரிவித்துக் கொண்டார். இந் நிகழ்ச்சியில் ஏராளமான திமுக தொண்டர்களும் பொதுமக்களும் கலந்துக் கொண்டு தமிழ்நாடு அரசின் இனி நுழைவு கட்டணமில்லா சுங்கச் சேவை அறிவிப்பை வரவேற்று கொண்டாடினர்.  

 

உடன் சோழிங்கநல்லூர் பகுதி செயலாளர்கள் பெருங்குடி எஸ்.வி.ரசந்திரன், வி.இ.மதியழகன், வட்ட செயலாளர்கள் வெங்கடேசன், பாபு, கோவிலம்பாக்கம் ஊராட்சி முன்னாள் தலைவர் ரங்கநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here