சென்னை, ஏப். 17 –

தர்மபுரி மாவட்டம் பாலவாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடைப்பெற்று வந்த நிலையில் கரியப்பனள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி என்பவர் உயிரிழந்துள்ளார்.

அச்செய்திக் கேட்டு தமிழக முதலமைச்சர் உயிரிழந்த விவசாயி கணேசனின் குடும்பத்திற்கு தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார். மேலும் முதலமைச்சர் பொது நிவராண நிதியிலிருந்து ரூ. 5 இலட்சம் நிதியினை வழங்கிட உத்தரவுப் பிறப்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் அறிவித்துள்ள அறிவிப்பில் முத்தமிழறிஞர் வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசு என்றென்றும் விவசாயிகளுக்கு உற்றத்தோழனாக இருந்து செயல்படும் என அவர் அளித்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here