காஞ்சிபுரம், மார்ச். 06-
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் வீடு வீடாக சென்று, வாக்களித்து தன்னை வெற்றிப் பெற வைத்த வாக்களர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நகர திமுக பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் திரளாக சென்றனர். அப்போது பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். மேயர் சென்ற இடமெல்லாம் பொதுமக்கள் சால்வை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் அனைவரும் அவர்களது வார்டு பகுதியில் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
அதுப்போன்று, காஞ்சிபுரம் மாநகராட்சி 9-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் தலைமை கழக அறிவிப்பின் படி மறைமுக தேர்தலில் மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்ட மகாலட்சுமி யுவராஜ் இன்று காஞ்சிபுரம் மாநகராட்சிகுட்பட்ட 9-வது வார்டு பாவா தெரு, ஏகாம்பரநாகர் சன்னதி தெரு, பாண்டவ பெருமாள் கோயில் தெரு உள்ளிட்ட பல பகுதிகளில், வீடு வீடாக சென்று தனக்கு வாக்கு அளித்து வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு இனிப்புகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கி தனது நன்றியினை அவர்களிடத்தில் தெரிவித்தார்.
மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் சென்ற இடமெல்லாம் பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மாலை மற்றும் சால்வை அணிவித்தும், பேண்டு வாத்தியம் முழங்க பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், தான் தேர்தலில் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொதுமக்தளுக்கு மேயர் உறுதியளித்தார்.

























