புல்லரப்பாக்கம், பிப். 28 –

திருவள்ளூர் மாவட்டம் புல்லரப்பாக்கம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ஈக்காடுகண்டிகை கிராமத்தில் வசிப்பவர் ரவி என்பவரின் மகன் குமரேசன் இவரது அண்ணன் தரணி மகன் சஞ்சய் வயது 8 கடந்த பிப் 24 ஆம் தேதி அன்று காலை 8.40 மணியளவல், ஈக்காடு கண்டிகையில் இருந்து ஊராட்சி தொடக்கப்பள்ளிக்கு நடந்து செல்லும் போது ஈக்காடுகண்டிகை மாதாகோயில் அருகே ஓதிக்காட்டிலிருந்து திருவள்ளூர் மார்க்கமாக சென்ற பல்சர் இருசக்கர வாகனத்தில் வந்தவர் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்து பள்ளிக்கு நடந்து சென்ற சிறுவன் சஞ்சய் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். அவ்விபத்தில் தனது அண்ணன் மகன் சஞ்சய்க்கு வலதுகாலில் எலும்பு முறிவு மற்றும் தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் முதல்நிலை சிகிச்சப்பெற்று தொடர் சிகிச்சைக்காகவும், மேல் சிகிச்சைக்காகவும் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

   தனது அண்ணன் மகன் சிறுவன் சஞ்சய் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய நபர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி அவர் புல்லரப்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்துள்ளப் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் தானும் தன் அண்ணனும் மருத்துவமனையில் சஞ்சய் உடன் மருத்துவமனையில் உடன் இருப்பதால் இப்புகாரை தாமதமாக அளிக்க நேர்ந்த தாகவம் அதில் தெரிவித்துள்ளார் அப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here