மீஞ்சூர், மார்ச். 31 –
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் வரிவிதிப்பு மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் நியமன குழு தலைவராக சுமதி தமிழ்உதயன் போட்டியிட்டார். வரி விதிப்பு மேலாண்மை குழு உறுப்பினர்களாக நக்கீரன், ரஜினி, அபூபக்கர், பரிமளம். உள்ளிட்ட 4 உறுப்பினர்களும் தேர்தலில் போட்டியிட்டனர். இவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாத நிலையில் குழு உறுப்பினர்கள் ஐவரையும் ஒருமனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்க பட்டுள்ளதாக பேரூராட்சியின் செயல் அலுவலர் வெற்றிஅரசு அறிவித்தார்.
அதனை தொடர்ந்து கூட்டத்தில் கலந்துகொண்டு வாக்களித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ் மற்றும் துணைத் தலைவர் அலெக்சாண்டர் உள்ளிட்டோர் நன்றிகளை தெரிவித்தனர்.





















