செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊரப்பாக்கம் அன்னை அஞ்சகம்நகர், செல்வராஜ்நகரில் புதிதாக அமைக்கப்பட்ட புதிய மின் மாற்றி தொடக்க விழா நடைபெற்றது
செங்கல்பட்டு, செப். 7 –
காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராமுதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமிமதுசூதனன் ரிப்பன் வெட்டி புதிதாக அமைக்கப்பட்ட மின் மாற்றியை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்
இதன் தொடர்ச்சியாக மழை காலங்களில் ஊரப்பாக்கம் பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளிலும் சுற்றி மழை நீர் தேங்கியுள்ளது. இனி வரும் காலங்களில் மழை நீர் தேங்காமல் இருக்கவும் புதிய சாலைகளை அமைக்க ஊரப்பாக்கம் பகுதிவாசிகள் எம்.எல்.ஏ விடம் கோரிக்கை வைத்தனர் .விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாகவும் சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமிமதுசூதனன் உறுதியளித்தார்.