காஞ்சிபுரம், செப் . 4 –

காஞ்சிபுரம் பெரியார் நகர் அருகே  சுதர்சன் விரிவாக்கம் நகர் பகுதியில் வசித்து வருபவர்  கவிதா. இவர்  வாலாஜாபாத் சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இந் நிலையில் கவிதா தன் குடும்பத்தோடு நேற்று உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் இன்று காலை வீடு திரும்பிய போது, அவரது வீட்டின்  கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 43 சவரன் தங்க நகைகள் ,வைர நெக்லஸ், கம்மல் மற்றும் ஒரு லட்சத்தி முப்பதாயிரம் ரொக்கப் பணம்,  வெள்ளி பொருட்கள் திருடு போனது குறித்து  தெரிய வந்தது.

இதனையடுத்து கொள்ளைச் சம்பவம் குறித்து காஞ்சி தாலுக்கா காவல் நிலையத்தில் கவிதா புகார் அளித்த்தின் பேரில்  சம்பவ இடத்திற்கு சென்ற  போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் வீட்டில் சோதனை மேற் கொண்டனர். மேலும் காஞ்சிபுரம்  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் அப்பகுதியில் இருக்கக்கூடிய சிசிடிவி கேமரா முழுவதும் போலீசாரின்  ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

இக்கொள்ளை சம்பவம் தொடர்பாக காஞ்சி தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர  விசாரணை மேற்கொண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here