திருவள்ளூர், நவ. 26 –

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் இங்கு பணி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை பணியில் இருந்த மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போது, மருத்துவர் நிரஞ்சன் மற்றும் சக மருத்துவர் டேவிஸ்செந்தில் ஆகிய இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து நடைப்பெற்ற மோதல் ஒருக் கட்டத்தில் கைகலப்பில் முடிந்தது. இதில் கையில் கிடைத்ததை எடுத்து அடித்துக் கொண்ட இருவரில், மருத்துவர் நிரஞ்சனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரத்த காயங்கள் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தொடர்ந்து அவர் மீஞ்சூர் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி செய்யும் பணியாளர்கள் மருத்துவர் டேவிஸ் செந்திலை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக்கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here