திருவண்ணாமலை, மார்ச். 14 –
திருவண்ணாமலை தாலுக்கா அனைத்து வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்திய 36ம் ஆண்டு வணிகர் தினவிழா திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவுக்கு தாலுக்கா அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் டி.எம்.சண்முகம் தலைமை தாங்கினார். காப்பாளர்கள் ஏ.ஆர்.மணி, பி.ராமச்சந்திர உபாயத்யாயா ஆர்.வடிவேல் எஸ்.ராதா ஏ.பிச்சாண்டி பி.கணேசன் எஸ்.டி.தனகோட்டி ஆகியோர் முன்னிலை வகிக்க, செயலாளர் ஆர்.சங்கர் அனைவரையும் வரவேற்றார். பொருளாளர் எம்.ரத்தினவேலு வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். முன்னாள் செயலாளர் ஏ.பழனி வணிகர் சங்க கொடியை ஏற்றிவைக்க எஸ்.ரவிசந்திரன் தலைமையில் வணிகர்கள் உறுதிமொழி யேற்றுக் கொண்டனர்.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் எவ.வேலு பழம்பெரும் வணிகர்களை பாராட்டியும் வணிகர் நல அறக்கட்டளை சார்பில் முதலுதவி திட்டங்களையும் நலிந்த வணிகர்களுக்கு ஓய்வூதியத்தையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.விக்கிரமராஜா வாழ்த்துரை வழங்கினார். இந்த விழாவில் சி.என்.அண்ணாதுரை எம்பி, அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் எ.வ.வே.கம்பன் முன்னாள் நகரமன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ப.கார்த்திவேல்மாறன் நகரமன்ற தலைவர் நிர்மலா கார்த்திவேல்மாறன் துணை தலைவர் சு.ராஜாங்கம் சங்கத்தின் மாநில கூடுதல் செயலாளர் எஸ்.ராஜசேகரன் மாநில இணை செயலாளர் பி.செந்தில்மாறன் காப்பாளர் வி.தனுசு மாவட்ட தலைவர் எம்.மண்ணுலிங்கம் மற்றும் வணிகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் செயலாளர் டி.பி.எஸ்.முரளிதரன் நன்றி கூறினார்.

















