திருநின்றவூர், ஏப். 10 –
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூரில் திருவள்ளூர் மாவட்ட கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பாக குருத்தோலை பவனி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு சிறப்பித்தனர்.
ஆவடியை அடுத்த திருநின்றவூரில் திருவள்ளூர் மாவட்டம் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பாக, தந்தை மைக்கேல் பிரான்சிஸ், தந்தை, ஷோஸ், தந்தை,டேவிட் குருதாஸ் ஆகியோர் தலைமையில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு ப. லட்சுமிபுரம் சீயோன் ஆலயத்திலிருந்து குருத்தோலை பவனி புறப்பட்டு, சி.எஸ்.ஐ ஆலயம் வழியாக பெரியபாளையம் சாலையில் உள்ள ஆர்.சி. தேவாலயத்திற்கு வந்தடைந்தது.
அதனைத்தொடர்ந்து, ஆலயத்தில் பாதிரியார்கள் சிறப்பு ஜெபம் செய்து இயேசுவின் பாடல்கள் பாடினார், இந்தக் குருத்தோலை பவனி விழாவில் திருநின்றவூர் பகுதியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயத்திலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள்,பெண்கள், மற்றும் சிறுவர்களென பெருந்திரளாக குடும்பத்திடன் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.





















