திருவண்ணாமலை பிப்.11-

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு நடப்பு பருவத்திற்கு தேவையான இடுபொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைத்திட மாவட்ட நிர்வாகம் வேளாண் துறை மூலம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் உள்ள தனியார் விற்பனை மையங்களில் யூரியா தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மணலியில் இருந்து 1459 மெட்ரிக் டன் யூரியா சரக்கு ரயில் மூலம் திருவண்ணாமலை ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து அனைத்து தனியார் மொத்த விற்பனை மற்றும் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு சரக்கு லாரிகள் மூலம் யூரியா பிரித்து அனுப்பும் பணியை வேளாண் உதவி இயக்குநர் தரகட்டுப்பாடு விஜயகுமார் ஆய்வு மேற்கொண்டார்.

தற்போது மாவட்டத்தில் 665 மெட்ரிக் டன் யூரியா 817 மெட்ரிக் டன் டிஏபி 758 மெட்ரிக் டன் பொட்டாஷ் 4460 மெட்ரிக் டன் காம்பளக்ஸ் ஆகிய உரங்கள் இருப்பில் உள்ளதாகவு தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலைக்கு விவசாயிகளுக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் முருகன் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here