பொன்னேரி, ஏப். 08 –
தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி தன் கட்சி தொண்டர்களுக்கு கோடை வெயில் வெப்பத்தினை தனித்திடும் வகையிலும், மேலும் அக்காலக் கட்டத்தில் மக்களுக்கு ஏற்படும் தாகத்தினை போக்கிடும் வகையிலும் ஆங்காங்கே தமிழ்நாடு முழுவதிலும் முக்கிய இடங்களில் நீர் மற்றும் மோர் பந்தல் திறக்க அறிவுறுத்தியிருந்தார்.
அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதிலும் அக்கட்சி தொண்டர்கள் பல்வேறு முக்கிய இடங்களில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்து மக்கள் தாகத்தினை தணித்து வருகின்றனர்.
மேலும் அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாரத்தில் உள்ள மக்கள் நடமாட்டம் உள்ள முக்கிய பகுதிகளான ஜனபத்சத்திரம் கூட்டு சாலை, தச்சூர் கூட்டு சாலை, ஆண்டார்குப்பம் பஜார் பகுதி, பொன்னேரி பழைய பேருந்து நிலையம், உள்ளிட்ட நான்கு இடங்களில் அப்பகுதி அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்கள் திறப்பு விழா இன்று நடைப்பெற்றது.
மேலும் அத்திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அதிமுக திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளர் சிறுணியம் பி.பலராமன் தலைமையேற்று நீர் மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.
மேலும் முதல் நாளான இன்று அந்நீர் மோர் பந்தலில் மக்கள் பயன்பாட்டிற்காக தர்பூசணி, வெள்ளரிப்பிஞ்சு, மோர், இளநீர், மற்றும் குளிர்பானங்கள் என பல்வேறு பாணங்கள் மக்களின் தாகம் தணிக்க அவ்விழாவில் மாவட்டச் செயலாளர் அனைவருக்கும் வழங்கினார். மேலும் இவ்விழாவினை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட திரளான அப்பகுதி மக்களும் இவ்விழாவில் பங்கேற்றனர்.





















