திருவண்ணாமலை அக்.28-
இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் திருக் கோயில்களின் வளர்ச்சிப் பணிகள் குறித்து பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர்கள் (27.10.2021) ஆய்வு மேற் கொண்டார்கள்.
பொதுப்பணித் துறை அமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆகியோர்கள் தனகோட்டிபுரம் – அருள்மிகு அருணாச்சலேசுவரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இதனை தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், புதுப்பாளையம் புதூர் செங்கம் அருள்மிகு மாரியம்மன் கோயில் வளாகத்தில் புதிய திருமண மண்டபம் அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்வது குறித்தும், இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் கலசபாக்கம் வட்டம், தென்மாதி மங்கலம் கிராமத்தில் அருள்மிகு கரைகண்டீஸ்வரர் (ம) மல்லிகார்ஜீன சுவாமி திருக்கோயிலில் கட்டப்பட்டுள்ள புதிய வணிக வளாகம் மற்றும் தங்கும் அறைகளை திறந்து வைத்து, புதிய அரசு கலைக்கல்லூரி கட்டுவதற்கு இடத்தினையும் தேர்வு செய்வது குறித்தும் பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோர்கள் ஆய்வு செய்தார்கள்.
மேலும், திருவண்ணாமலை மாவட்டம், போளுர் வட்டம், அ.கோ.படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயிலில் குடமுழுக்குத் தேதி அறிவித்தல், புதுப்பிக்கப்பட்ட பொங்கல் மண்டபம் திறந்து வைத்தல், புதிய அன்னதானக் கூடத்தை பக்தர்களின் பயன் பாட்டிற்காக கொண்டு வருதல், புதிய திருமண மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டல், கலைஞர் தலமரக்கன்றுகளை நடுதல் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதி ஆகியவற்றின் கல்வெட்டினை திறந்து வைத்து மற்றும் திருக்கோயிலில் வுஏளு நிறுவனத்தின் நன்கொடை மூலம் கட்டப்பட்ட அர்ச்சர்கள் குடியிருப்பிற்கான சாவியினை பொதுப்பணித் துறை அமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆகியோர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, ஆணையர், இந்து சமய அறநிலையத் துறை, ஜெ.குமரகுருபரன் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ், பாராளுமன்ற உறுப்பினர் திருவண்ணாமலை) சி.என்.அண்ணாதுரை, சட்டன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி (செங்கம்), பெ.சு.தி.சரவணன் (கலசபாக்கம்), கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மு.பிரதாப் இணை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை கஜேந்திரன், ஒன்றிய குழுத் தலைவர்கள் சி.சுந்தரபாண்டியன் (புதுப்பாளையம்) திருமதி.அன்பரசி ராஜசேகரன் (கலசபாக்கம்), மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் திருமதி.பார்வதி சீனிவாசன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் திருமதி. பாரதி ராமஜெயம், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.