திருவண்ணாமலை செப்.30-
மத்திய அரசு அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்களை ஒருங்கிணைக்க உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தரவு தளம் ஒன்றை உருவாக்கி உள்ளது. அதன்படி இந்த இணையதளத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட தொழிலாளர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள். விவசாயத் தொழிலாளர்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள். ரிக்க்ஷா வண்டி இழுப்பவர்கள், தெரு வியாபாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள். வீட்டு வேலைப் பணியாளர்கள், கட்டடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளர்கள், சுய உதவி குழுக்கள், மற்றும் நிரந்தரம் வருமானம் இல்லாத அனைத்து தொழிலாளர்களும் இந்த தரவு தளத்தில் தங்களது விவரங்களை பதிவுச் செய்ய வேண்டும்.
இந்த பதிவு செய்யும் பணி மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சேவை மையங்களிலும் நடைபெற்று வருகிறது.
மாநில அரசின் பல்வேறு வகையான நலத்திட்டங்களின் கீழ் பதிவு செய்துள்ள அனைத்துத் தொழிலாளர்களும் இந்த இணையதளத்தின் கீழ் பதிவு செய்யலாம். இந்த தரவு தளத்தில் தொழிலாளர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ள 16 வயது முதல் 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மேலும் இதற்கு எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை பதிவு செய்வதற்கு ஆதார் அட்டை, ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண். வங்கிக் கணக்குப் புத்தகம் மற்றும் பிறந்த தேதி, பிறந்த ஊர், எந்த சமூகத்தினை சேர்ந்தவர் ஆகிய விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இந்த தகவல்களை பதிவேற்றம் செய்த உடன் பயனாளிகளுக்கு 12 இலக்க எண் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படும். அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலை காரணங்களுக்காகவோ அல்லது வேறு ஏதும் பிற காரணங்களுக்காகவோ புலம் பெயர நேர்ந்தாலும், அரசிடமிருந்து பெறவேண்டிய சலுகைகளைப் பெற இந்த அடையாள அட்டை உதவியாக இருக்கும்.
இந்த தரவு தளத்தில் தன்னை இணைத்துக் கொள்ளும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்திற்கான விபத்து காப்பீடு திட்டத்தின் மூலமாக பெறலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர்.பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் – மாதாந்திர உதவித்தொகை ரூ.6 முதல் 10 ஆயிரம் வரை வழங்கப்படும் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு