திருவண்ணாமலை, செப்.3 –
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது அதில் ரூ.45 லட்சத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதந்தோறும் கோவில் நிர்வாகம் எண்ணுவது வழக்கம்.
இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக வாரம்தோறும் 3 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுவதில்லை. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுகின்றனர். இந் நிலையில் ஆகஸ்டு மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அண்ணாமலையார் கோவில் 3ம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் நடந்தது.
இந்த பணியில் தன்னார்வலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் பங்கேற்று காணிக்கையை எண்ணினர். அப்போது ரூ.45 லட்சத்து 46 ஆயிரத்து 436 ரொக்கம், 263 கிராம் தங்கம், 728 கிராம் வெள்ளி ஆகியவற்றை உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.