450 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து வறுமையில் தவிப்பு
செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன்
ராமநாதபுரம் ஆக.30-
தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர் ஜி. பி.எஸ். நாகேந்திரன் ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களை நம்பி வாழும் 450 க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் வாழ்வாதரத்திற்கு வழிவகுக்கும் வகையில் அதனை திறந்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் நான், தலைமையின் ஆணைக்கிணங்க சென்னையிலிருந்து ராமேஸ்வரம் சென்று அங்குள்ள ராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள தற்போது மூடிக்கிடக்கும் 22 தீர்த்தங்கள் மற்றும் அதனை நம்பி வாழும் 450 குடும்பங்கள் நிலை குறித்தும் ஆய்வு மேற் கொண்டேன். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டு வறுமை நிலையை உணர்த்துவதை அறிந்தேன். தமிழக அரசு உடனடியாக இந்த விசயத்தில் கவனம் செலுத்தி அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழி வகுக்கும் வகையில் 22 தீர்த்தங்களையும் திறந்து அதை நம்பி இருக்கும் 3000 பேர்களின் வாழ்க்கைக்கு வழி வகுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன். திருச்செந்தூரில் நாழிக்கிணறு திறக்கப்பட்டு விட்டது அதனடிப் படையில் 22 தீர்த்தங்களை ராமேஸ்வரத்தில் திறக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். உடன் நகரத் தலைவர் வீரபாகு, மாவட்ட பொதுச் செயலாளர் சந்தர முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன், போகலூர் ஒன்றிய கவுன்சிலர் இ.எம்.டி. கதிரவன், மாவட்ட துணைத்.தலைவர் நாகேந்திரன், மாவட்ட ஊடக பிரிவு S.P.குமரன் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.