சென்னை, ஆக. 23 –
சந்திரயான் 3 யின் வெற்றி 140 கோடி இந்தியர்களின் ஆர்வம் மற்றும் திறன்களைப் பிரதிபலிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பதிவைப் பகிர்ந்து பிரதமர் வெளிட்டுள்ள பதிவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய எல்லைகள் மற்றும் அதையும் தாண்டி இது வெற்றியடைந்துள்ளது இந்தியாவுக்குப் பெருமையான தருணம் எனவும் அப்பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.





















