திருவண்ணாமலை, ஆக.5-
திருவண்ணாமலையில் ஒரு தனியார் கூட்டரங்கில் தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு மற்றும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கூட்டமைப்பு தலைவர்கள் கலந்தாய்வு கூட்டம் மாநில தலைவர் அரசை எஸ்.எம்.முனியாண்டி தலைமையில் நேற்று நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் ஆரணி அ.ராஜன், மாவட்ட அவைத் தலைவர் கவிதா ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகிக்க, மாவட்ட செயலாளர் எம்.மணிகண்டன் அனைவரையும் வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு மனதார பாராட்டி வாழ்த்தி மகிழ்வதோடு தற்போதுள்ள ஊராட்சி அமைப்புகளை கலைக்கமாட்டோம் என்று நம்பிக்கை தெரிவித்த முதலமைச்சருக்கு தற்போது எஞ்சியுள்ள 9 மாவட்டங்களுக்கும் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தமைக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்வதோடு ஊரக வளர்ச்சி துறையில் மாவட்டந்தோறும் ஊராட்சி தலைவர்களுக்கென ஒரு ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்கவேண்டும்
மின்சாரம் குடிநீர் கட்டணம் கணக்கில் 3 அல்லது 4 மாதத்திற்கான நிதியை வைத்துக்கொண்டு மீதமுள்ள உபரிநிதியை ஊராட்சி பொது நிதிக்கு மாற்றம் செய்ய வேண்டும். ஊராட்சியில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப பஞ்சாயத்துராஜ் சட்டப்படி தலைவர்கள் செயல்பட வேண்டும்.
ஊராட்சி செயலாளர்களை 3 ஆண்டுக்கொருமுறை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் 2011ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படை தற்போது ஊராட்சி நிதிகள் வழங்கப்படுவதை மாற்றி 2020 மக்கள் தொகை அடிப்படையில் நிதிகள் வழங்கிட அரசு ஆவன செய்ய வேண்டும்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வரும் அனைத்து ஊராட்சி பணிகளை மேற் கொள்வதில் உள்ளூர் சேர்மன் கவுன்சிலர்கள் மற்றும் அரசியல் தலையீடுகளை தவிர்த்து தலைவர்கள் சுதந்திரமாக பஞ்சாயத்து ராஜ் சட்டம் வழிகாட்டு நெறிமுறைகள் படி நிர்வாகம் மேற்கொள்ள அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
ஆடு மாடு கொட்டகை வழங்கும் முறையில் உள்ள முறைகேடுகளை கலையவேண்டும் ஊராட்சி தலைவர்களிர் நிரவாகத்துக்கு ஒத்துழைப்பு தராமல் நிர்வாகத்தை சீர்குலைக்கும் ஊராட்சி துணைத் தலைவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
ஊராட்சிக்கு வழங்கப்படும் மாநில நிதிக்குழு (எஸ்எப்சி) மானியத்தை குறித்த நேரத்தில் வழங்க வேண்டும். 14, 15 நிதிக்குழு நிதியில் நிர்வாக அனுமதி வழங்குவது காலதாமதத்தை தவிர்க்க வேண்டும்
தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி மன்றங்களை கலைக்ககூடாது வரும் ஆகஸ்டு 15 சுதந்தின தினத்தன்று தடையேதுமின்றி கிராம சபை நடத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கௌரி காசிநாதன் மாவட்ட துணைத் தலைவர் திவ்யா கோபி டி.மோகன் மாவட்ட துணை செயலாளர்கள் வி.முரளிதரன் துர்கா தேவி வெங்கடேசன் ஊராட்சி மன்ற தலைவர்கள் வயலூர் சதாசிவம் டி.மாசிலாமணி போளூர் ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் பி.கணேசன் உள்பட சங்க நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் என்.கருணாநிதி நன்றி கூறினார்.