இன்று பிரதமர் அலுவலகச் செய்திக் குறிப்பில் நமது ஆண்கள் ஹாக்கி குழுவினர், டோக்கியோ 2020 போட்டியில் தங்களது சிறந்த திறனை வெளிப் படுத்தினார்கள், அதுதான் முக்கியம் என்று பிரதமர் அதில் குறிப்பிட்டு அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி செய்தி வெளியிட்டுவுள்ளார்.

டோக்கியோ 2020 போட்டியில் நமது ஆடவர் ஹாக்கி குழுவினர் தங்களது சிறந்த திறனை வெளிப் படுத்தினார்கள் என்றும், அதுதான் முக்கியமானது என்றும்,பிரதமர்  நரேந்திர மோடி கூறியுள்ளார். அடுத்து வரவிருக்கும் போட்டிக்கும், குழுவினரின் எதிர்கால முயற்சிகளுக்கும் பிரதமர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:

“வெற்றிகளும், தோல்விகளும் வாழ்வின் ஓர் அங்கம். டோக்கியோ 

2020 போட்டியில் நமது ஆடவர் ஹாக்கி குழுவினர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்தினார்கள், அதுதான் முக்கியம். 

வரவிருக்கும் அடுத்த போட்டிக்கும், குழுவினரின் எதிர்கால முயற்சிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். நம் வீரர்களால் இந்தியா பெருமை

அடைகிறது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here