திருவண்ணாமலை, ஆக 1-
திருவண்ணாமலை அடுத்த வள்ளிவாகை கிராமத்தைச் சேர்ந்த குமார் (23) வழுதலங்குணம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த பாரதி (55) ஆகியோர் கள்ளச்சாராய விற்பனை செய்வதை தொழிலாளாக கொண்டிருந்தனர். திருவண்ணாமலை மதுவிலக்கு அமுலாக்கப் பிரிவு ஆய்வாளர் நிர்மலா தலைமையிலான காவல்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி இவர்கள் இருவரையும் கைது செய்தனர். இவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி பரிந்துரையின் பேரில் ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் வேலூர் மத்திய சிறை அதிகாரிகளிடம் காவல்துறையினர் வழங்கினர்.