திருவண்ணாமலை, ஜூலை.28-

2021-ம் ஆண்டு இந்திய அரசின் சார்பில் கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், அறிவியல், பொறியியல், வணிகம், தொழிழ்சாலை, ஆகிய பிரிவுகளில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படவுள்ளது.  இந்திய அரசின் உயரிய விருதான இது மலைவாழ் மக்கள், சமூகத்தின் பிற்படுத்தப் பட்டோர் நலன், பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றில் சாதனை புரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.  மருத்துவர்கள் அல்லாத அரசு ஊழியர்கள், விஞ்ஞானிகள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. ஆன்லைன் விண்ணப்பங்கள் மற்றும் மேலும் தகவலுக்கு இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.   ஆன்லைன் விண்ணப்பங்கள் தவிர தபாலிலோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது. மேலும், கூடுதல் விவரங்கள் பெற மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அவர்களை 04175-233169 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here