திருவாரூர், ஆக. 03 –

தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவகங்கள் தேநீர் கடைகள் இறைச்சி கடைகள் என திடீராய்வு மேற்கொண்டு அங்கு பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய உணவுப் பொருட்கள் தரமானதாகவும், கலப்படமற்றதாகவும் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக நேற்று திருவாரூர் அடுத்த காட்டூர் என்ற பகுதியில் அமைந்துள்ள  தேனீர் கடையில்  பயன் படுத்தக்கூடிய டீத்தூளில் கலப்படம் கலந்து பொது மக்களுக்கு தேநீர் வழங்கப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.

தகவலின் பெயரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அன்பழகன் தலைமையில் அங்கு வந்த அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது தேநீர் கடையில்  பயன்படுத்தப்படும் டீத்தூள் குறித்து அங்கு உள்ள ஊழியர்களிடம் கேட்டறிந்தனர்.

இதில் அவர்கள் இரண்டு வகையான டீத்தூள்கள் பயன்படுத்துவது தெரிய வந்தது. இதனை அடுத்து அவர்கள் பயன்படுத்திய டீ தூள் மாதிரிகளை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

சோதனையின் முடிவில் டீத்தூளில் ஏதேனும் கலப்படம் கலந்து இருந்தால் சம்பந்தப்பட்ட தேனீர் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். மேலும் இது போன்ற புகார்கள் வந்தால் உடனடியாக அங்கு சென்று ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொது மக்களுக்கு வழங்கக்கூடிய உணவுப் பொருட்களில் கலப்படம் கலக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்  எச்சரித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here