திருவண்ணாமலை, ஜூலை.29-
இந்திய அரசு திருவண்ணாமலை மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழகம் ஆகியவை இணைந்து திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருப்பாவை ஆசிரமத்தில் 7 வயது சிறுமி ஆர்.எஸ்.சமந்தா உலக சாதனை முயற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜாராம் – சௌபர்ணிகா ஆகியோரின் மகள் ஆர்.எஸ்.சமந்தா வயது ஏழு இவர் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று தொழுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கொரோனா 3ம் அலை பாதுகாத்துக் கொள்ள அனைவரும் தடுப்பூசி மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திருக்குறளின் 133 அதிகாரத்திற்கு 133 யோகாசனம் செய்து விழிப்புணர்வு மற்றும் உலக சாதனை முயற்சியை மேற்கொண்டார் இதனை திருவண்ணாமலை கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சேர்ந்த டி.வி.எம்.நேரு என்பவர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு நேரு யுவகேந்திரா திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். யோகா செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிக்கு திமுக நகர செயலாளர் பா.கார்த்திவேல்மாறன் பரிசு வழங்கினார். இதில் ஜன் ஹித் சேவா டிரஸ்ட் அரு.கலைநம்பி, நற்பவி பொதுநல அறக்கட்டளை நிறுவனர் எஸ்.தங்கவேலு, நற்பவி சித்தா கேர் டாக்டர் ஆர்.ராஜேஷ், பைரவர் அன்னதான அறக்கட்டளை செயலாளர் ஜி.ஜவஹர்லால் நேரு, அறிவியல் ஆசிரியர் பி.ஹயாத்பாஷா, ஆசிரியர் பயிற்றுநர் வி.துரைசாமி, திருபுவன், சோணாசல அடிகளார், சாதுக்கள் சேவை மையம் சிவனடியார் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் யோகா ஆசிரியர் ஆர்.கல்பனா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறுமியின் பெற்றோர் ஆர்.செல்வராஜ் – ஞானசௌந்தரி மற்றும் உறவினர்கள் செய்திருந்தனர்.