ராமநாதபுரம் : ஆகஸ்ட், 23- நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா விழா இன்று  கோலகலமாக கொண்டாடப் பட்டது.மக்கள் வீடுகளை அலங்கரித்து கிருஷ்ணன் பாதங்களை வரைந்து அலங்கரித்தனர்.கிருஷ்ணன் ஆலயங்களில் பல்வேறு  சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெற்றது.

 

இதே போல ராமநாதபுரம் மாவட்டம் பட்டிணம்காத்தான் பகுதியில் இன்று யாதவர் சங்கத்தின் சார்பில் 23-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா உறியடி உற்சவத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.

கிருஷ்ண ஜெயந்தியை சிறப்பிக்கும் வகையில் பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக கண்ணபிரான் ஆலயத்திற்கு வந்தனர்.காலை 8 மணி முதல் கண்ணபிரானுக்கு சிறப்பு அபிசேகங்களுடன் சிறப்பு பூஜைகள் தீப ஆராதனை செய்யப்பட்து. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.இரவு 7 மணிக்கு ஊர் முக்கியஸ்தர்கள் சிறப்புரை வழங்கி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். இந் நிகழ்ச்சியில் மதுரை அபிநயா ஸ்ரீஇசை குழுவின் நாட்டுப்புற பல்சுவை கலை நிகழ்ச்சி நடைபெறறது. மேலும் நாதஸ்வர நையாண்டி மேளம் உட்பட தஞ்சாவூர் குழுவினரின் கரகாட்டமும் நடந்தன.வினோத்குமார் உறியடித்தார்.சஞ்சய்ராஜ் உறி கயிறு இழுத்தார்.பாலமுருகன் தேரோட்டினார். இந் நிகழ்ச்சி ஏற்பாட்டினை யாதவ சங்க நிர்வாகிகள்  தலைவர் சாத்தையா செயலாளர் செல்வராஜ்,பொருளாளர் ஜெகதீஸ் துணைத்தலைவர் திருப்பதி, துணை செயலாளர்  ரமேஸ் (எ) சரவணன் தண்டல் இராமநாதன், ஆலய அர்ச்சகர் விஜய ராகவன் அய்யங்கார் செய்தியிருந்தனர் .மேலும் விழா கமிட்டியாளர், யாதவர் சங்கம், யாதவர் இளைஞர் சங்கம்,  மகளிர் மன்றங்கள் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர். அன்னதான ஏற்பாட்டினை சுப்பையா நகர் முருகேசன் சண்முக வள்ளி குடும்பத்தினர் செய்திருந்தனர். விழாவில் கதிரேசன், சங்கர்,  பாலமுருகன்,  கணேசன்,  கூரிதாஸ்,  செல்வம்இவர்களுடன் அழகு முத்துக்கோன் அறக்கட்டளை செயலாளர்  முருகன் கலந்து கொண்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here