மீஞ்சூர், ஜூன். 18 –

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் அடங்கிய 2வது வார்டு அரியன்வாயில் பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை மற்றும் மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம்முகாமினை பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர்  துவக்கி வைத்தார். துணை இயக்குநர் மக்கள் நலப்பணிகள் டாக்டர் ஜவஹர்லால் வழிகாட்டுதலின் படி நடைபெற்ற இந்த முகாமில் இரத்த அழுத்தம் ,சர்க்கரை, இருதயம் ,ஈசிஜி, கண், பல் சிகிச்சை கர்ப்பினிப் பெண்களுக்கான பரிசோதனை, சித்தா, யுனானி வழிமுறை சிகிச்சைகள் மற்றும் பால்விணை நோய்கள், சளி இருமல் தொண்டை பரிசோதனைகள் உள்ளிட்டவைகள் நடைபெற்றன.

இந் நிகழ்வில் மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ்  துணை தலைவர் அலெக்சாண்டர் ,வட்டார தலைமை மருத்துவர் ராஜேஷ் ,திமுக மீஞ்சூர் நகர செயலாளர் மோகன்ராஜ் ,திமுக நிர்வாகிகள் சைய்யதுஅலி ,யுசுப், இளைஞர் அணி நிர்வாகிள் சமத்சாகுல், பஷிர்அகமது ,காதிரி அசாருத்தின், காங்கிரஸ் நிர்வாகிகள் ஜெயசீலன் அன்பரசு ,சுகுமார், சித்திக்பாஷா , காமராஜ் மீஞ்சூர் தெற்கு வட்டார செயலாளர் வல்லூர் அரவிந்தன், வார்டு உறுப்பினர் ரஜினி ,சமூக  ஆர்வலர்கள் குருசாலமோன் வெங்கடேசன் உள்ளிட்ட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக அரியன் வாயல் அரசு நடுநிலைப்பள்ளிக்கு இரண்டு புதிய கழிப்பறைக்கான அடிக்கல் நாட்டும் விழாவும் நடைபெற்றது. வார்டு உறுப்பினர் அபுபக்கர் அனைவருக்கும் நன்றி கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here