திருவள்ளூர்; ஏப்,18-
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் மகேஸ்வரி ரவிக்குமார் பதட்டமான வாக்குச் சாவடிகள் என இத் தொகுதியில் கண்டறியப் பட்ட பல வாக்குச் சாவடிகளுக்கு நேரில் சென்று தேர்தல் வாக்குப் பதிவு மற்றும் குறை படுகள் எழுகின்ற இடங்களில் அதற்கான தீர்வுகளுக்கு அறிவுறுத்தல் செய்தும், பாதுகாப்பு குறித்து ஆய்வும் செய்தார். அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைப் பெறுவதற்கும், 100 சதவீதம் வாக்களிப்பு நடைப்பெற அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க தேர்தல் பணியில் ஈடுப்பட்டு வரும் அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல் செய்தார்.