கன்னியாகுமாரி: கன்னியாகுமாரி மாவட்டம் கிள்ளியூர் அடுத்த தூத்தூர் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டதால் மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.தூத்தூர் பகுதியைச் சேர்ந்த 1000 மீனவர்களின் பெயர்கள் பட்டியலில் இல்லாததை சுட்டிக் காட்டி தேர்தல் அலுவலர் மறுப்பு தெரிவித்தார். ஆத்திரமடைந்த மீனவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.