கூடுவாஞ்சேரி, ஏப். 17 –

இஸ்லாமியர்களால் புனித மதமாகப் போற்றப்படும் ரமலான் மாதத்தில் அவர்கள் 30 நாட்கள் நோன்பிருந்து தொடர்ந்து 5 வேளை தொழுகை மேற் கொள்வார்கள்.

மேலும் வானில் தோன்றும் பிறையை கணக்கு வைத்து இந்நோன்பினை அவர்கள் கடைப்பிடித்து வருவது வழக்கமாகயிருந்து வருகிறது. இந்நிலையில் ரமலான் முதல் தேதியான நேற்று வானில் பிறை தென்பட்டதால், அவர்கள் அந்நோன்பினை துவக்கும் வகையில் நோன்பு திறப்பு விழா தொடங்கப்பட்டது. மேலும் எதிர்வரும் மே மாதம் 3 ஆம் தேதி இஸ்லாமியர்களின் பண்டிகையான ரம்ஜான் பண்டிகை யாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் அதன்தொடர்ச்சியாக செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே தமிழ்நாடு முஸ்ஸிம் முன்னேற்றக் கழகம் சார்பில் சமத்துவ நோன்பு திறக்கும் நிகழ்ச்சி அப்பகுதியில் நடைபெற்றது

மேலும், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக  தமிழ்நாடு முஸ்ஸிம் முன்னேற்ற கழகத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் தாம்பரம் யாக்கூப் பங்கேற்று நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மேலும் இச்சமத்துவ நோன்பு நிகழ்ச்சியில் இந்து, கிருஸ்துவர், முஸ்ஸிம் என சாதி மதம் கடந்து 200 – க்கும் மேற்பட்டவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here