திருவாரூர், ஆக. 02 –

திருவாரூர் மாவட்டம், நன்னிலம், குடவாசல், வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் பெருத்த அளவில் விவசாயக் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர மக்கள் என அப்பகுதிகளில் அதிகமாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அரிசி விலை கணிசமாக உயர்ந்துள்ளது எனவும், அதனால் நடுத்தர மக்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர் எனவும்,         மேலும்  அரிசியின் விலையேற்றத்தினால்,  தற்போது அரிசி கிலோவுக்கு  8 ரூபாய்  முதல் 10 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக மைசூர் ரக அரிசி 1300-இருந்து 1500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், மேலும் சாதரண இட்லி ரக அரிசி கிலோ 36- ல் இருந்து ரூபாய் 40-க்கு விற்கப்படுவதாகவும் அப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர் சூனா செந்தில்  தெரிவித்தார்.

மேலும் இவ்வரிசி விலை உயர்வால் பொதுமக்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளிகள் என அனைத்துத் தரப்பு  மக்களும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகிவுள்ளனர் எனவும் அப்போது அவர் தெரிவித்தார். இதுக்குறித்து  அரசு உடனடியாக  நடவடிக்கை மேற்கொண்டு, விலைவுயர்வை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

மேலும் அவர் ஏற்கனவே “தக்காளியின் விலையேற்றத்தால் பாதிப்புக்குள்ளாகிவுள்ள மக்கள்,  தற்போது நிலவும் அரிசி விலை ஏற்றத்தால்  மக்கள் மீள முடியாத பொருளாதார பாதிப்பில் இருப்பதாக அப்போது அவர் தெரிவித்தார்.

பேட்டி: ‘சூனா’ செந்தில், (சமூக ஆர்வலர்) திருவாரூர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here