திருவண்ணாமலை, ஜூலை 28-2021-

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இந்திய அரசு நேரு யுவ கேந்திரா திருவண்ணாமலை, ஜன ஹத் சேவா சங் டிரஸ்ட், சுவாமி விவேகானந்தா யோகா கேட்டரிங்க் கழகம், மக்கள் தொண்டு அறக்கட்டளை நிறுவனம், மற்றும் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் ஒருங்கிணைத்து நடத்திய நிகழ்ச்ச

7 வயது சிறுமி சமந்தா திருக்குறளின் 133 அதிகாரங்களுக்கு 133 வகையான யோகாவினை செய்து உலக சாதனை முயற்சிக்கும் யோகவின் விழிப்புணர்விற்காகவும் செய்து காட்டினார். இதனை காண திரளான மக்கள் வந்திருந்து இந்நிகழ்ச்சியை கண்டுக்களித்தனர். இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை திமுக நகரச்செயலாளர் கார்த்தி வேல் மாறன் கலந்துக்கொண்டு இச் சாதனையை மேற் கொண்ட 7வயது சிறுமி சமந்தாவிற்கு பரிசும் பாராட்டும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு எஸ்.தங்கவேலு ( நிறுவனர் நெற்பவி பொதுநல அறக்கட்டளை ) முன்னிலை வகிக்க, தலைமையை எம்.இரமசந்திரன் ஏற்று நடத்தினார். ராஜாராம் சௌபர்னிகா வரவேற்புரையாற்றினார். இவ்விழா நிகழ்ச்சியை ஆர்.செல்வராஜ் ஞானசௌந்தர் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியின் முடிவில் யோகா ஆசிரியை ஆர்.கல்பனா நன்றியுரை ஆற்ற நிகழ்ச்சி இனிதே முடிவுற்றது.   

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here