காஞ்சிபுரம், மார்ச். 01 –

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் தற்போதைய தமிழகத்தின் முதலமைச்சருமாகிய மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் திமுகவினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் சார்பில் செங்கல்பட்டு அருகே பரனூரிலுள்ள தொழுநோயாளிகள் காப்பகத்தில் உணவு மற்றும் உடை ஆகியவற்றை திமுகவினர் வழங்கினர்.

   இதில் ஊரக தொழில் துறை அமைச்சர் தாமோ. அன்பரசன் கலந்து கொண்டு காப்பகத்தில் இருந்த 300- தொழுநோயாளிகளுக்கு புத்தாடை வழங்கி மதிய உணவு வழங்கினார். இதில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here