கும்பகோணம், மார்ச்.13 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்

தஞ்சாவூர் மாவட்டம், காம்பகோணம் மாநகரம், கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தினம் கோவிந்தன் மஹாலில் மகளிர் துணைக்குழ வட்ட துணை தலைவர் கலைச்செல்வி, தலைமையில் நடைபெற்றது.

இதில் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க வட்ட தலைவர் துரைராஜ், வட்ட செயலாளர் பக்கிரிசாமி, வட்ட பொருளாளர் ராமமூர்த்தி, வட்ட துணை தலைவர்கள் சண்முகம், செளந்தரராஜு, வட்ட இணை செயலாளர்கள் சேகர், சாரங்கன், கண்ணாமணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன், தனிக்கையாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, வைரமுடி, மகளிர் துணைக்குழ சிறைவாணி, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜகோபாலன், அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாநகர செயலாளர் சுமதி, சத்துணவு ஊழியர் சங்கம் கவிதா, அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் தேவகி, அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாநில உதவி செயலாளர் கிரிஜா, மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் அவ்விழாவில் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாநில உதவி செயலாளர் கிரிஜா பேசுகையில் பெண்ணின் பெருமைகளையும், பெண்களின் சாதனைகள் பற்றியும், எதிர்காலத்தில் பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் உள்ளிட்ட குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் விரிவரை நிகழ்த்தினார்.

மேலும் தஞ்சாவூர் பேருந்தில் பாபநாசம் அய்யம்பேட்டை செல்லும் பயணிகள் மற்றும் பெண் பயணிகளை கடைசியில் ஏறலாம் என்று சொல்வதை கைவிட வேண்டும். இதுக் குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புகார் மற்றும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. என்றும் கும்பகோணம் மாநகரம் முழுவதும் பெண்கள் அதிகமாக கூடும் இடங்களில் இலவச கழிப்பறைகளை, மாநகராட்சி நிர்வாகம் செய்து தர வேண்டும். என்றும், மேலும் பாலியல் வன்கொடுமையில் ஈடுப்படும் குற்றவாளிகளுக்கு உடனே தண்டனை வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் அந்நிகழ்வில் நிறைவேற்றப்பட்டது..

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here