தேர்வு எழுத கால அவகாசம் தரக்கோரி பயிற்சி பட்டய மாணவர்கள் கூடுவாஞ்சேரியில் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுப் பட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு, செப். 6 –
தமிழகம் முழுவதும் ஆசிரியர் பட்டய பயிற்சி மாணவ மாணவியர்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகிறது
இந்நிலையில் ஆசிரியர் பட்டய பயிற்சி படித்த மாணவ மாணவிகளுக்கு இது நாள்வரை கல்லூரிகள் திறக்கப்படாத நிலையிலேயே ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடைபெற்று உள்ளதாகவும்,
கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்வு கட்டணம் செலுத்த முடியாமலும் அவதிப்பட்டு வரும் நிலையில்,
தேர்வு குறித்து திடீர் அறிவிப்பு வெளியிடப்பட்டு கால அவகாசம் இன்றி தேர்வுகள் நடத்தப்படுவதாகவும், அதனால் தேர்வுக்கு தயாராகி எழுதும் வகையில் கால அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஆசிரியர் பட்டயப் பயிற்சி மாணவ மாணவியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்வு எழுத இருந்த ஆசிரியர் பட்டய பயிற்சி மாணவ மாணவியர்களில் பெரும்பாலானோர் தேர்வினை புறக்கணித்து உள்ள நிலையில்
தேர்வு எழுத கால அவகாசம் கேட்டும், தேர்வு தாள் திருத்தும் முறையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை முன் வைத்து கடந்து மூன்று தினங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்
சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கருப்பு பேஜ் அணிந்து மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தங்கள் கோரிக்கை அரசு நிறைவேற்ற வில்லை என்றால் தமிழகம் முழுவதும் அனைத்து ஆசிரியர்கள் ஒன்றினைந்து சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்தனர்.