திருவள்ளூர் செப் 18 :

திருவள்ளூர் மாவட்டத்தில் கரும்பு பயிர் செய்து 2020-21 அரவை பருவத்தில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சப்ளை செய்த சுமார் 1300 விவசாய பெருமக்களுக்கு ரூ.22.69 கோடி கரும்பு நிலுவை தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

மேலும், நடப்பாண்டில் கரும்பு நடவு செய்யும் விவசாயிகள் அனைவரும் தமிழக அரசு அறிவித்துள்ள சொட்டு நீர் பாசன திட்டத்தின் கீழ் 100 சதவீத மானியத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகள், 75 சதவீத மானியத்தில் பெரு விவசாயிகள் பதிவு செய்து சொட்டு நீர் பாசனம் அமைத்து கரும்பு நட்டு அதிக மகசூல் மற்றும் வருமானத்தை பெருக்கிக் கொள்ளலாம். 

மேலும் பதிவு செய்யாமல் விடுபட்டுள்ள அனைத்து விவசாயிகள் உடனடியாக கோட்ட கரும்பு அலுவலர்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நடப்பாண்டு அரவை பருவத்திற்கு கரும்பு அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here