கும்மிடிப்பூண்டி, பிப். 06 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பால கணபதி …

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் எட்டு வயது சிறுமி, 15 நிமிடங்களில், 500 ஆங்கில சொற்களஞ்சிய வார்த்தைகளின் சொற்கூட்டல் கூறி, நான்கு உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த பிரபாகரன், கனிமொழி தம்பதியரின் மகள் பி.ரிதன்யா வயது 8. கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ கலைமகள் வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். மேலும் அவர் தொடர்ந்து, 14 நிமிடம் 44 விநாடிகளில், 500 ஆங்கில சொற்களஞ்சிய வார்த்தைகளின் சொற்கூட்டல் கூறி சாதனை படைத்துள்ளார்.

மேலும் அவரது அச்சாதனை வேல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட், இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட், நோபல் உலக சாதனை மற்றும் அசிஸ்ட் உலக சாதனை  புத்தகங்களில் இடம் பிடித்துள்ளன.

சாதனை படைத்த மாணவி ரிதன்யாவை, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்  டி.ஜெ.கோவிந்தராஜன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து கெளரவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here