சென்னை, மே. 16 –

சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் தனியார் திருமண மண்டபத்தில் இன்று தமிழ்நாடு நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மற்றும் துப்புரவு அலுவலர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் எடுத்து வைக்கப்பட்டு விவதாத்திற்கு பின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர், நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நகராட்சி இயக்குநர் ஆகியோருக்கு நன்றி அறிவிப்பு, மாநில மற்றும் மண்டல அளவிலான பதவி உயர்வு வழங்கப்பட் வேண்டும்,  பணி நேரம் நிர்ணயிக்கப்பட வேண்டும்,  அரசு விடுமுறை காலங்களில் பணிப்புரிந்தால் அதற்கான ஈடு செய் விடுப்பு வழங்கப்பட வேண்டும், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் வழக்கம் போல் துப்புரவு ஆய்வாளர்கள் பிறப்பு இறப்பு பதிவாளர்கள் ஆக இருத்தல், தேர்தல் பணியில் இருந்து விலக்கு, ஊதிய உயர்வு போன்ற பல்வேறு  கோரிக்கைகளை முன் வைக்கப்பட்டு பொதுக்குழு கூட்டத்தில் இவை அனைத்திற்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் மாநிலத்திலுள்ள சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சி உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளில் இருந்து பணிபுரியும் துப்புரவு ஆய்வாளர்கள் துப்புரவு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் மாநில துப்புரவு ஆய்வாளர் மற்றும் துப்புரவு அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் ஆல்பர்ட் அருள்ராஜ் மாநில பொதுச்செயலாளர் செந்தில் ராம்குமார் சரவணன் கோவிந்தராஜ் செந்தில் மற்றும் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here