திருவாரூர், ஜூன். 26 –

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்தை பேணும் வகையில் அதற்கு உறுதுணையாகவும், பாதுகாப்பு  அரணாகவும் இருந்து வரும் கழிவுநீர் அகற்றும் தனியார் வாகன உரிமையாளரை நசுக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அச்சங்கத்தின் மாநில செயலாளர் ரத்தினம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசிடம் போதிய கழிவு நீர் அகற்றும் வாகனம் இல்லாத காரணத்தாலும், கழிவு நீரை உடனுக்கு உடன் அகற்றுவதன் மூலம் பொது சுகாதாரத்தை பேணி காத்து வரும், மற்றும் தொற்று நோயிலிருந்து மக்களை பாதுகாக்கும் அரசின் சுகாதார பாதுகாப்பு பணிக்கு அரணாக தமிழகம் முழுவதும் கனரக வாகனங்கள், சிறிய வாகனங்கள் என 3000த்திற்கும் மேற்பட்ட கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங் மனித கழிவுகள் சுத்தம் செய்யும் வாகனங்கள் தனியார் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இத்தகைய வாகனங்களை நம்பி இவ்வாகன உரிமையாளர்கள், அவரது குடும்பத்தினர், அத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் என லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரத்திற்கு அத்தொழில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

ஆனால் தமிழக அரசு கழிவுநீர் அகற்றுவதில் சிறிய வாகனங்களை பயன்படுத்தக்கூடாது, எனவும், மேலும் கழிவுநீர், செப்டிக் டேங் அகற்றும் பணிக்கு வாகனங்களை ஈடுபடுத்தும் போது  மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அதிகாரிகளின் அனுமதி பெற வேண்டும் என அரசு அறிவித்துள்ள 183 வது அரசாணை பொதுசுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதோடு, இத்தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கானோரின் பொருளாதார நிலை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே தமிழக அரசின் அரசாணை 183 ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள் நலச் சங்கத்தினர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசின் இவ்வாணைக்கு எதிராக பதாகைகளை அவர்கள் கையில் ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   இதனை தொடர்ந்து அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ரத்தினம் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இது சம்மந்தமான கோரிக்கை அடங்கிய மனு ஒன்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here