புதுச்சேரி, ஏப். 11 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…

புதுச்சேரி அதிமுக பிரச்சாரத்தில் குழந்தையுடன் பெண்கள் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு உச்சி வெயிலில் கலந்து கொண்டு அவதிக்கு உள்ளாகினார்கள்.

புதுச்சேரியில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் அவ் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சியினர் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக வேட்பாளர் தமிழ் செல்வனை ஆதரித்து நெல்லித்தோப்பு தொகுதி முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் இதனிடையே சாரம் பாலம் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் வேட்பாளரின் வருகைக்காக சுமார் 1-மணி நேரம் வெயிலில் காத்திருந்தனர்.

தொடர்ந்து அங்கு வேட்பாளர் வந்த நிலையில் உச்சி வெயிலில் தலையில் முக்காடு அணிந்து கொண்டு பிரச்சாரத்தில் கலந்துக்கொண்டனர். அதன் காரணமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகுந்த அவதிக்குள்ளானது அதனைப் பார்க்கின்ற பொதுமக்களிடையே பெருத்த கவலையை ஏற்படுத்தியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here