பொன்னேரி, ஜூலை. 10 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமாரசாமி ஆலயம் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பொன்னேரி நகர பாதயாத்திரை குழு சார்பில்  பக்தர்கள் பால்குடம் ஏந்தி வருவது வழக்கமாகும்.

அதன்படி பத்தாவது ஆண்டாக ஆனி மாதம் இரண்டாம் வாரம் 110 பேர் பொன்னேரி சுற்று வட்டார பகுதியில் இருந்து பெரும்பேடு ஸ்ரீ பெருமாள் கோவிலில் இருந்து அருள்மிகு ஸ்ரீமுத்துகுமாரசுவாமி ஆலயத்திற்கு ஊர்வலமாக பெண்கள் பால்குடம் ஏந்தி வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்தனர்.

பொன்னேரி பாதயாத்திரை குழுவினர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் திரளான பக்த கோடிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here