தரங்கம்பாடி அருகே தியாகி தில்லையாடி வள்ளியம்மையின் 110 வது நினைவு தினத்தை முன்னிட்டு, தில்லையாடியில் அமைந்துள்ள அவரது நினைவு மணி மண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு, மாவட்ட ஆட்சியர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தில்லையாடி, பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திர சேகர்…
இந்திய சுதந்திர விடுதலைப் போராட்டத்தில் காந்தியடிகள் பங்கேற்பதற்கு முன்பாக தென்னாப்பிரிக்காவில் நிறவெறியை எதிர்த்து போராடியவர் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்துள்ள தில்லயாடியைச் சார்ந்த வள்ளியம்மை ஆவார் மேலும் 1913ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரியை எதிர்த்து நடைப்பெற்ற மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவருடன் தமிழர்கள் பலரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
மேலும் மகாத்மா காந்தி ஒருக் கால கட்டத்தில் நினைவுக் கூறுகையில் தனக்கு முதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டியவர் தில்லையாடி வள்ளியம்மைதான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 1913 ம் ஆண்டு தென்னாப்பிரிக்க சிறையில் அடைபட்ட தில்லையாடி வள்ளியம்மை, 1914 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே நாளில் உயிர்நீத்தார். மகாத்மா .காந்தியால் நினைவு கூறப்பட்ட தில்லையாடி வள்ளியம்மையின் 110 வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கபட்டு வருகிறது.
அதன் பகுதியாக தில்லையாடியில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட தியாகி வள்ளியம்மை நினைவு மணி மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து, செம்பனார்கோவில் ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், ஊராட்சி ஒன்றிய துணை பெருந் தலைவர் தில்லையாடி ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கராஜ், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் என பலர் நினைவு விழாவில் பங்கேற்று சுதந்திரப் போராட்டதியாகி தில்லையாடி வள்ளியம்மை உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி நினைவஞ்சலி செலுத்தினார்கள்.





















