கும்பகோணம், மார்ச். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், கும்பகோணத்தில் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய 9 வது மாதத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதற்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பு இருப்பது வழக்கமாகும்.
மேலும் அந் நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் சாப்பிட்ட பின்னர் சூரியன் மறையும் வரை எதுவும் உண்ணாமல் நோன்பு இருப்பார்கள். பிறை கணக்குபடி 29 அல்லது 30 நாட்கள் நோன்பு இருப்பது இஸ்லாமியர்களின் வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் இன்று கும்பகோணம் மாநகரில் உள்ள இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலில் நடைபெற்றது. அந்நிகழ்வில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை செய்தப் பின்பு நோன்பு திறந்தனர்.




















