மயிலாடுதுறை, பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்….
மயிலாடுதுறை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பள்ளி ஆசிரியருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது
மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிக்கு அப்பள்ளியில் பணிபுரியும் திருவிளையாட்டம் பகுதியை சேர்ந்த நாராயண பிரசாத் ( 57 ) என்கின்ற ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் இளவரசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ வழக்கு பதிவு செய்து குற்றவாளியை கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பான இறுதி வழக்கு விசாரணை இன்று நாகப்பட்டினம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அதில் வழக்கை விசாரித்த நீதிபதி மணிவண்ணன் குற்றவாளி நாராயண பிரசாத்துக்கு 25 ஆண்டு காலம் சிறை தண்டனை மற்றும் ரூ. 70 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.அதனைத் தொடர்ந்து குற்றவாளி நாரயணப் பிரசாத் கடலூர் மத்திய சிறைச் சாலைக்கு போலீசார் அழைத்துச் சென்று சிறைச்சாலையில் அடைத்தனர்.





















