இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா. இவரது பந்து வீச்சு ஸ்டைல் மற்ற வீரர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.
குறுகிய தூரத்தில் இருந்து ஓடிவரும் பும்ரா, கையை ஒரு விதமாக வளைத்து பந்து வீசுவார். சுமார் 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசும் வல்லமை படைத்த அவரால் யார்க்கர் மற்றும் ஸ்லோ பந்தால் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்துவார்.
அவரது பந்து வீச்சை பின்பற்றி ஹாங் காங்கில் நடைபெற்ற 13 வயதிற்கு உட்பட்டோருக்கான லீக் போட்டியில் சிறுவன் ஒருவன் பந்து வீசினார். அச்சிறுவனின் பந்து வீச்சு இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.