தேனிமாவட்டம் பெரியகுளம் வடகரையில் அமைந்துள்ள நெல்லையப்பர் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா நடைப்பெற்றது. இவ் விழாவில் ஆசிரியர்களின் சமுதாயப் பணியை போற்றும் வகையிலும், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் பொன்னாடை மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி விழாவினை சிறப்பித்தனர்.

தேனி; செப்,06-

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மறைந்த ஆசிரியரும், முன்னாள் குடியரசு தலைவருமான டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினத்தை ஆசிரியர் தின விழாவாக இந்திய அரசால் அரசு விழாவாக செப்-5 ல் கொண்டாடி வருகிறது. அவரின் சிறப்பைப் போற்றும் வகையிலும் அவர் வழியில் சமுதாய அக்கறையுடன் பணியாற்றி வரும் ஆசிரிய பெருந்தகைகளுக்கு மரியாதை செலுத்திடும் வகையில் அந்நாளை ஆசிரியர் தினவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அத் திருநாள் நேற்று தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் அமைந்துள்ள நெல்லையப்பர் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்ட ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமரர் பிடிசி சிதம்பரம் சூரிய நாராயணன் அவர்களின் மகன் பி.சி. சிதம்பர சூரிய வேலு, அரிமா சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ.சி. சிவபாலா, நல்லாசிரியர் விருது பெற்ற எழுத்தாளர் குப்புசாமி, ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களை நெல்லையப்பர் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

 அப்போது சிறப்பு விருந்தினராக வந்த அவர்கள் ஆசிரியர்களுடைய சிறப்பும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உள்ள உறவு எவ்வாறு இருக்க வேண்டும் என்று பேசினார்கள் மேலும் பி.சி. சிதம்பர சூர்யவேலு பேசும் போது . ஆசிரியர்கள் கற்று தரும் பாடங்களை மட்டும் படிக்கக் கூடாது அவர்களுடைய பண்பாடு கலாச்சாரம்,  நல்ல ஒழுக்கம் போன்ற நல்ல பண்புகளையும் சேர்த்து கற்றுக்கொள்ள வேண்டும் மாதா பிதா குரு தெய்வம் என்ற கோட்பாடுகளுக்கு ஏற்றவாறு மாணாக்கர்கள் நடந்து கொள்ள வேண்டும் அறிவுறுத்தி பேசினார்.

விழாவின் இறுதியாக நெல்லையப்பர் நடுநிலைப்பள்ளியில் தாளாளர். முத்துமாணிக்கம் அனைத்து ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசும் பொன்னாடையும் போர்த்தி கௌரவப் படுத்தினார். இறுதியில்  எம் சேதுராமன் அவர்களுக்கும். நினைவு பரிசு வழங்கி கெளரவித்தார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here