திருவண்ணாமலை, செப்.9-

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் குடிநீர் வசதிக்காக ரூ.1லட்சம் மதிப்பில் செய்யாற்றில் உள்ள திறந்தவெளி கிணற்றிலிருந்து பைப் லைன் மற்றும் மின்மோட்டார் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

அதே போல் ரூ.3 லட்சம் மதிப்பில் பூண்டி கிராமத்திற்கு மயானப் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து பழங்கோயில் பூண்டி மோட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பண்ணை குட்டைகள் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த அவர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அறிவுறுத்தினார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றியத்தில் உள்ள 18 அரசு பள்ளிகளுக்கு கொரோனா நோய் தடுப்பு உபகரணங்களை ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் வழங்கினார்.

இதில் ஆணையாளர் ஏ.எஸ்.லட்சுமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here