திருவண்ணாமலை, செப்.9–
திருவண்ணாமலை வடமாத்தாதி தெருவிலுள்ள ஒரு தனியார் விடுதியில் தமிழ்நாடு காந்தி பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் நிறுவன தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.எஸ்.விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.
பணி நிறைவு பெற்ற பேராசிரியர் சுப்பிரமணியன் முன்னிலை வகிக்க, பொதுச் செயலாளர் எழுத்தாளர் ந.சண்முகம் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் இனி மாதந்தோறும் கூட்டம் நடத்துவதெனவும் சாதனையாளர்களுக்கு விருது வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் லதா பிரபுலிங்கம், அ.வாசுதேவன், பாடகர் மோகன், பாவலர் பா.குப்பன், முருகையன், தமிழ்ச்செல்வி கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இறைசித்தர் முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.