கும்பகோணம், நவ. 17 –
கும்பகோணத்தில் கோவை கோட்டைமேடு பகுதியில் வசித்து வந்த 17 வயது மாணவி ஆர். எஸ் புரத்திலுள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தவர், வீட்டில் தனியாக இருந்த போது, திடீரென அம் மாணவி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சின்மயா வித்யாலயா பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வரும் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தால், மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். அம் மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் இன்று வகுப்பு புறக்கணிப்பு செய்து மரணத்திற்கு காரணமானவர்கள் அனைவரையும் கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இறந்த மாணவி பொன்தரணிக்கு நீதி வேண்டும் .. நீதி வேண்டும் என கல்லூரியின் முன் நின்று முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.